அடித்தது ஒரு சிக்ஸ்.. ஆனால் அது100.. வரலாற்று சாதனை படைத்த ஹிட்மேன்..!

Rohit Sharma is the first cricketer to score 100 sixes in all types of matches against Australia in international matches.

இந்தியா,ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 338 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் களமிறங்கினர். இந்த போட்டியில் 16-வது ஓவரின் போது ரோகித் அடித்த சிக்சர் சர்வதேச போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அனைத்து வகையான போட்டிகளிலும் 100 சிக்சர்களை அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

இதனால், ரோஹித்தின் மொத்த சிக்சர் 424 ஆக உயர்ந்தது. கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ரோஹித்  3வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் கிறிஸ் கெய்ல் 534, அப்ரிடி 476 சிக்ஸர் உடன் 2-வது இடத்தில் உள்ளனர்.

ஒரு அணிக்கு எதிராக அனைத்து வகையான போட்டிகளிலும் 100 சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் முதலிடம் இல்லை, இங்கிலாந்து அணிக்கு எதிராக கெய்ல் 140 சிக்சர்கள்அடித்துள்ளார். இந்த போட்டியில் ரோகித் 26 ரன்களில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி இரண்டாம்நாள் ஆட்ட முடிவில் 45 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 96 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் புஜாரா 9*, ரகானே 5* ரன்களுடன் உள்ளனர்.