கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்து குஜராத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
எனவே, முதலில் களமிறங்கிய குஜராத் நீங்க மட்டும் தான் அதிரடி அணியா நாங்கள் அதிரடி கட்டமாட்டோமா என்பது போல ஆரம்பமே அதிரடியாக விளையாடியது என்று சொல்லலாம். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சப்மன் கில் 76, ஜோஸ் பட்லர் 64, சாய் சுதரன் 48 ரன் எடுத்தனர்.
அடுத்ததாக 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியது. குஜராத்தை போலவே ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விளையாடினார்கள்.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஹெட் அதிரடி காட்ட தவறினாலும் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் ஆட்டமிழந்தால் என்ன நான் தான் இருக்கேனே என்பது போல அபிஷேக் சர்மா களத்தில் நின்று கலக்கி கொண்டு இருந்தார். சிக்ஸர் பவுண்டரி என விளாசி வெற்றிக்கு போராடி கொண்டு இருந்தார்.
அவருக்கு மற்றோரு முனையில் பார்ட்னர் ஷிப் இல்லாதது பெரிய தடுமாற்றமாகவும் இருந்தது என்று சொல்லலாம். ஏனென்றால், ஹெட்டிற்கு பிறகு களத்திற்கு வந்த இஷான் கிஷன் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அவருக்கு அடுத்ததாக வந்த க்ளாஸனும் அதிரடி காண்பிக்காமல் நிதானமாக விளையாடினார்.
இதனால் போட்டியின் வெற்றி அப்படியே கொல்கத்தா பக்கம் திரும்பியது என்று தான் சொல்லவேண்டும். 32 பந்துகளில் 90 என்ற நிலைமைக்கு வந்தபோது போட்டியில் ஹைதராபாத் தோல்வி தான் என ரசிகர்கள் தலையை தொங்கபோட்டுவிட்டார்கள். இருப்பினும் விடாமுயற்சியை கைவிட கூடாது என்பது போல முடிந்த அளவுக்கு அபிஷேக் ஷர்மா முயற்சி செய்தார் அவரும் ஒரு கட்டத்தில் 74 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன் காரணமாக குஜராத் பக்கம் வெற்றி முழுவதுமாக திரும்பியது. களத்தில் கிளாசான் இருந்தாலும் அவரும் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். எனவே, தடுமாறி விளையாடி வந்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் காரணமாக குஜராத் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மேலும், குஜராத் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா 2 , சிராஜ் 2, விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்கள்.