"ஐ மிஸ் யூ" ஷேன் வார்ன்..! பழைய புகைப்படத்தை பகிர்ந்து எமோஷனல் ஆன சச்சின்..!

ஷேன் வார்னின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் அவருடன் எடுத்த பழைய புகைப்படத்தை சச்சின் பகிர்ந்துள்ளார்.

ஷேன் வார்னின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் அவருடன் எடுத்த பழைய புகைப்படத்தை சச்சின் பகிர்ந்துள்ளார்.

புகழ்பெற்ற ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் அவருடன் எடுத்த பழைய புகைப்படத்தை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு இதே நாளில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன், தாய்லாந்தில் விடுமுறைக்கு சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

அவர் இறந்த செய்தி கிரிக்கெட் உலகையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்பொழுது வார்னின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஷேன் வார்ன் உடன் இருக்கும் பழைய புகைப்படத்தை பகிந்துள்ளார்.

அவர் பகிர்ந்த புகைப்படத்தில்,”மைதானத்தில் சில மறக்கமுடியாத போட்டிகளை நாங்கள் விளையாடியுள்ளோம் மற்றும் அதன் மறக்கமுடியாத தருணங்களையும் பகிர்ந்துகொண்டோம். நான் உங்களை ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக மட்டுமன்றி ஒரு சிறந்த நண்பராகவும் உங்கள் இழப்பை நினைத்து வருந்துகிறேன். உங்கள் நகைச்சுவை உணர்வு மற்றும் கவர்ச்சியின் மூலம் நீங்கள் சொர்க்கத்தை ஒரு அழகான இடமாக மாற்றுகிறீர்கள் என்று நான் நம்புகிறேன், வார்ன்.” என்று பதிவிட்டுள்ளார்.

unknown node