virat kohli rcb [file image]
விராட் கோலி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். மக்களை போலவே, கிரிக்கெட் வீரர்கள் பலரும் கூட விராட் கோலியின் தீவிர ரசிகர்களாக இருந்து வருகிறார்கள். இதன் காரணமாக விராட் கோலியை பற்றி பெருமையாக புகழ்ந்து பேசியும் வருகிறார்கள்.
அந்த வகையில், ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் இளம் கிரிக்கெட் வீரரான நிதிஷ் குமார் ரெட்டி சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நடந்த நிகழ்ச்சியில் கொடுத்த பேட்டி ஒன்றில் விராட் கோலி பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எனக்கு கிரிக்கெட்டில் பிடித்த வீரர்கள் என்றால் விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் என்று கூறுவேன்.
நான் கிரிக்கெட் விளையாடிய ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே இவர்களுடைய பேட்டிங்கை பார்த்து தான் வளர்ந்து கொண்டேன். அதிலும் குறிப்பாக எனக்கு விராட் கோலி பேட்டிங் ரொம்பவே பிடிக்கும். கடந்த 10 வருடங்களாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் தீவிர ரசிகனாக இருக்கிறேன். 2023ல், நான் விராட் கோலியை சந்திக்க முடிந்தது என் வாழ்கையில் மறக்க முடியாத நிகழ்வு.
அதுவும் சாதாரணமாக வாங்கக்கூடாது. சிறப்பாக விளையாடி அவரிடம் ஆட்டோகிராப் வாங்கவேண்டும். வரும் ஆண்டுகளில் நான் பெங்களூர் அணிக்கு எதிராக விளையாடும் போது மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டும். நான் சிறப்பாக விளையாடுவதை விராட் கோலி பார்க்கவேண்டும். அவர் பார்க்கவேண்டும் என்பதற்காகவே சிறப்பாக விளையாட முயற்சி செய்வேன்” எனவும் நிதிஷ் குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…