ஐசிசி டெஸ்ட் தரவரிசை.. ஜோ ரூட் முன்னேற்றம்.. விராட் கோலிக்கு பின்னடைவு..!

India captain Kohli has suffered a setback in the ICC Test rankings. Meanwhile England captain Joe Root has advanced.

இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையே சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து, 2 ஆவது டெஸ்ட் போட்டி வருகின்ற 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய கேப்டன் கோலி தரவரிசையில் பின்னடைவை சந்தித்துள்ளார். அதே நேரத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முன்னேறியுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய கேப்டன் கோலி  முதல் இன்னிங்ஸில் 11, 2- இன்னிங்ஸில் 72 ரன்கள் என 83 ரன் மட்டுமே எடுத்தார். இதன்காரணமாக 852 புள்ளிகளுடன் கோலி 5-வது இடத்திற்கு சென்றார். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதல் இன்னிங்ஸில் 218, 2- வது இன்னிங்ஸில் 40 என மொத்தமாக 258 ரன்கள் குவித்து 883 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு முன்னேறி சென்றார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் 919 புள்ளிகளுடன் கேன் வில்லியம்சனும், 891 புள்ளிகளுடன் ஸ்டீவ் ஸ்மித் 2-வது இடத்தில் உள்ளார்.