ICC WC23: ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இலங்கை... உலகக்கோப்பையில் விளையாட முதல் அணியாக தகுதி.!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாட இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது.

SL qualifies

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாட இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் 8 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள 2 அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் அணியாக வெஸ்ட் இண்டீஸ் முதல்முறையாக உலகக்கோப்பையில் விளையாட தகுதி பெறாமல் வெளியேறியது.

unknown node

இலங்கை அணி சூப்பர் சிக்ஸ் போட்டியில் தான் விளையாடிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் முட்டல் அணியாக உலககோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. இரண்டாவது அணியாக தகுதி பெறுவதில் ஜிம்பாப்வே மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவி வந்தாலும் ஜிம்பாப்வேக்கு அதிக வாய்ப்புள்ளது.

இன்று நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் மோதியது. இதில் 166 ரன்கள் இலக்கை இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது.