ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; ஆஸி. அணி அறிவிப்பு.!

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் முதல் இரு ஆஷஸ் டெஸ்ட்க்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் முதல் இரு ஆஷஸ் டெஸ்ட்க்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-23 ஆம் ஆண்டுக்கான இறுதிப்போட்டி வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கான இரு அணிகளாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் புள்ளிப்பட்டியலில் வெற்றி சதவீதம் மற்றும் ரன்ரேட் அடிப்படையில் தகுதி பெற்றுள்ளன.

கடந்த 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் இந்திய அணி நியூசிலாந்தை எதிர் கொண்டது, தற்போது தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்திய அணி இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் முதல் இரண்டு ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான 17 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட இறுதி அணி மே 28 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட் கம்மின்ஸ் அணியில் திரும்பியுள்ளார்.

பேட் கம்மின்ஸ் அணிக்கு கேப்டனாகவும், ஸ்டீவ் ஸ்மித் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி விவரம்,

ஆஸ்திரேலிய அணி:பேட் கம்மின்ஸ் (C), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சேன், நாதன் லியான், மிட்செல் மார்ஷ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா ஸ்டீவ் ஸ்மித்(VC), மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்

unknown node