இந்த செயல் தொடர்ந்தால் வேறு கேப்டன் கீழ் விளையாடுவீர்கள்..? எச்சரித்த சிஎஸ்கே கேப்டன் தோனி..!

சென்னை அணியின் கேப்டன் தோனி, தனது அணியின் பந்துவீச்சாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை அணியின் கேப்டன் தோனி, தனது அணியின் பந்துவீச்சாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

16-வது ஐபிஎல் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, ஐபிஎல் போட்டிகளில் நோ-பால் மற்றும் அதிக வைடுகளை வீச வேண்டாம் என்று தனது பந்து வீச்சாளர்களை எச்சரித்துள்ளார். நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

இதில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது. இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் லக்னோ அணிக்கு 20ஆவது ஓவரில் 28 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 15 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி லக்னோ அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

இதையடுத்து, லக்னோ அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிறகு, தோனி தனது அணியின் பந்துவீச்சாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். அவர், தனது அணியின் பந்து வீச்சாளர்கள் நோ-பால் மற்றும் வைடு பந்துகளை வீசுவதை குறைக்க வேண்டும். இதனால் நாங்கள் முடிவு செய்துவைத்திருந்த பந்துகளை விட கூடுதல் பந்துகளை வீசுகிறோம் என்று கூறினார்.

மேலும், தனது அணியினர் அத்தகைய பந்துவீச்சைக் குறைக்க வேண்டும் இல்லையெனில் அவர்கள் புதிய கேப்டனின் கீழ் விளையாடுவார்கள் என்றும் இது எனது இரண்டாவது எச்சரிக்கை, இதையும் கேட்காவிட்டால் நான் கேப்டன்ஷிப்பில் இருந்து விலகுவேன் என்று தோனி கூறியுள்ளார்.

unknown node