“ஓட விருப்பம் இல்லைனா சத்தமா ‘No’ சொல்லு”…கில்லை கிண்டல் செய்த ஜெய்ஸ்வால்!

எனக்கு பந்து அடிச்சதும் ஓடுற பழக்கம் இருக்கு என இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கிள்ளிடம் ஜெய்ஸ்வால் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

shubman gill yashasvi jaiswal

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய அணி 85 ஓவர்களில் 359/3 என்ற வலுவான நிலையை எட்டியது. இளம் கேப்டன் சுப்மன் கில் (127*) மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (101) ஆகியோரின் சதங்கள், ரோஹித் மற்றும் விராட் கோலி போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லை என்றாலும் அவர்களுடைய இடத்தை நிரப்பும் அளவுக்கு விளையாடியதை எடுத்துக்காட்டியுள்ளது.

இந்த ஆட்டத்தின் மத்தியில், ஜெய்ஸ்வால் மற்றும் கில் இடையே நடந்த ஒரு நகைச்சுவையான உரையாடல், மைதானத்தின் உற்சாகத்தையும், இரு வீரர்களின் நட்பையும் ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியது. முதல் நாள் ஆட்டத்தின் மத்திய அமர்வில், ஜெய்ஸ்வால் தனது ஆக்ரோஷமான பேட்டிங்கில் பந்தை அடித்து விட்டு, வழக்கம்போல விரைவாக ரன் ஓட முயன்றார். ஆனால், மறுமுனையில் இருந்த கேப்டன் சுப்மன் கில், ஓடுவதற்கு சற்று தயக்கம் காட்டினார்.

இதைப் பார்த்த ஜெய்ஸ்வால், கிண்டலாக, “உனக்கு ஓட விருப்பம் இல்லைனா சத்தமா ‘No’ சொல்லு. எனக்கு பந்து அடிச்சதும் ஓடுற பழக்கம் இருக்கு!” என்று சிரித்தபடி கத்தினார். இந்த உரையாடல், ஸ்டம்ப் மைக் மூலம் பதிவாகி,தற்போது வைரலாகி வருகிறது. இந்த நகைச்சுவை, கில் மற்றும் ஜெய்ஸ்வாலின் இயல்பான நட்பையும், இந்திய அணியின் இளம் வீரர்களிடையே உள்ள ஒற்றுமையையும் காட்டியது.

கில், பொதுவாக நிதானமான அணுகுமுறை கொண்டவர், அதே சமயம் ஜெய்ஸ்வால் ஆக்ரோஷமான, உற்சாகமான ஆட்டத்திற்கு பெயர் பெற்றவர். இந்த வேறுபாடு, மைதானத்தில் அவர்களின் கெமிஸ்ட்ரியை மேலும் சுவாரஸ்யமாக்கியது. ஜெய்ஸ்வாலின் சதமும், கில்லின் கேப்டன்ஸியும் இந்த தொடரில் இந்தியா வெற்றி பெரும் என்பதற்கான நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது. அடுத்தடுத்த போட்டிகளிலும் எப்படி இந்தியா அணி விளையாடப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்