ஐபிஎல் 2023 தொடரில் சென்னையில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
16-வது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில், இன்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 29 வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த சீசன் ஐபிஎல் தொடரில் சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. கடைசியாக பெங்களூருவில் நடைபெற்ற ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 218 ரன்கள் மட்டுமே எடுத்த பெங்களூரு அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றது. இதில் கான்வே தன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் அடித்து அரைசதம் கடந்தார்.
மார்க்ரம் தலைமையில் விளையாடுகின்ற ஹைதராபாத் அணி, இதுவரை நடந்த 5 போட்டிகளில் 2 போட்டிகளில் வென்று புள்ளி பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது. கடைசியாக மும்பை அணிக்கு எதிராக விளையாடிய ஹைதராபாத் அணி, 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் சென்னை அணியும், 9 வது இடத்தில் உள்ள ஹைதராபாத் அணியும் இன்றைய போட்டியில் வென்று தங்களின் இடத்தை முன்னோக்கி நகர்த்தும் முனைப்பில் போராடும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு தொடங்கும் என்பதால் இந்த இரு அணிகளில் எந்த அணி வென்று புள்ளிப்பட்டியலில் முன்னோக்கி நகரும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சென்னை vs ஹைதராபாத் : போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்களின் பட்டியல்.
சென்னை சூப்பர் கிங்ஸ் :
டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, சிவம் துபே, மொயீன் அலி/பென் ஸ்டோக்ஸ், ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி (C&W), துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா, மதீஷா பத்திரனா, ஆகாஷ் சிங்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :
ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (C), அபிஷேக் ஷர்மா, ஹென்ரிச் கிளாசென் (W), வாஷிங்டன் சுந்தர், அடில் ரஷித்/அகேல் ஹொசைன், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், மயங்க் மார்கண்டே