வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டி20 கிரிக்கெட் போட்டியில் தொடரை இந்தியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகின்ற இன்று நடைபெறுகிறது. இந்த போட்டி மதியம் 1 மணிக்கு ஆரம்பிக்க உள்ளது.
இந்த போட்டிதான் இந்திய அணி முதலில் விளையாடும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாகும். இந்த போட்டி பகலிரவு போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படுகிறது. பகலிரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்பட உள்ளதால், போட்டி தொடங்கி முடியும் வரை மைதானத்தின் அருகே பிங்க் நிறத்தில் பலூன் பறக்க விடப்படும். இந்த போட்டி ரசிகர்களிடம் மட்டுமல்லாது அனைவரின் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி தலைமையில், ரோஹித் சர்மா, மாயங்க் அகர்வால், சேடேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோர் விளையாட உள்ளனர்.
பங்களாதேஷ் அணியில், இம்ருல் கயஸ், ஷாட்மேன் இஸ்லாம், மோமினுல் ஹக், முகமது மிதுன் / முஸ்தாபிஸூர் ரஹ்மான், முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா, லிட்டன் தாஸ், மெஹிடி ஹசன், தைஜுல் இஸ்லாம், அபு ஜெயத், எபாதத் ஹொசைன் / அல்-அமீன் ஹொசைன் ஆகியோர் விளையாட உள்ளனர்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…