#INDvENG: இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்யவுள்ள இந்தியா.. தொடரை கைப்பற்றுவது யார்?

England won the toss and elected to bowl in the 3rd and final ODI between India and England. Who will win this match?

இந்தியா – இந்தியா அணிகளுக்கு இடையிலான 3 ஆம் மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, முதலில் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது. தற்பொழுது 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாம் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இதனைதொடர்ந்து இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புனேவில் தொடங்கவுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. இந்த போட்டியிலும் சூரியகுமார் யாதவ் இடம்பெறவில்லை. அதேபோல, நடராஜன் இடம்பெற்றுள்ளார்.

விளையாடும் வீரர்கள்:

இந்தியா:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, ஷர்துல் தாக்கூர், புவனேஷ்வர் குமார், பிரசீத் கிருஷ்ணா, நடராஜன்.

இங்கிலாந்து:

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், டேவிட் மாலன், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர் / கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் குர்ரான், ஆதில் ரஷீத், ரீஸ் டோப்லி, மார்க் வூட்.