"CSK CSK" என முழக்கமிட்ட ரசிகர்கள்.. விசில் அடிக்குமாறு கூறிய கோலி.. வைரலாகும் வீடியோ!

The captain of the Indian team, Kohli, blew the whistle and told the fans to blow. He shook the ground with his gesture, audible and still noisy.

இந்திய அணியின் கேப்டன் கோலி, விசில் அடித்து, ரசிகர்களை அடிக்குமாறு கூறினார். அவர் தனது சைகையால், “கேட்கல இன்னும் சத்தமா இன்னும்” என மைதானத்தையே அதிரவைத்தார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டி, சென்னையில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 88 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் அடித்தது. இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, 95.5 ஓவர்களில் தனது அனைத்து விக்கெட்டையும் இழந்து 329 ரன்கள் அடித்தது.

அதன்பின் இங்கிலாந்து அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. போட்டி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த பொது ரசிகர்கள் பெரிய அளவில் ஊக்கம் கொடுத்து, கோஷங்களை எழுப்பி வந்தனார். அப்பொழுது விராட் கோலி, ரசிகர்கள் கை தட்டும் போது கூடுதலாக கைதட்டும்படி ஊக்குவித்தார். அப்பொழுது மைதானத்தில் இருந்த ரசிகர்கள், “CSK CSK” என கோஷமிட்டனர்.

இதனைப்பார்த்த கோலி, விசில் அடித்து, ரசிகர்களை அடிக்குமாறு கூறினார். அவர் தனது சைகையால், கேட்கல இன்னும் சத்தமா இன்னும் என மைதானத்தையே அதிரவைத்தார். இதுதொடர்பான வீடியோ, சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தற்பொழுது நடைபெறவுள்ள 3 டெஸ்ட் தொடர்களிலும் வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கும் நிலையில், ரசிகர்கள் ஊக்குவிப்பது அவர்களுக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.