இந்திய பவுலர்களை மிரட்டிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்... எளிதான மேட்சை கோட்டை விட்டது தான் மிச்சம்.!

இந்திய அணி இன்று நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என்கிற வீதம் சமன் செய்துள்ளது.

இந்திய அணி இன்று நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என்கிற வீதம் சமன் செய்துள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் 5ஆவது மேட்ச் பார்மிங்ஹாவில் நடைபெற்றது. அப்போட்டி இன்று கடைசி கட்டத்தை எட்டிவிட்டது.

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி, 416 ரன்கள் எனும் நல்ல ஸ்கோரை தான் எடுத்து இருந்தது. அதன் பிறகு ஆடிய இங்கிலாந்து அணியும் ஓரளவு தாக்கு பிடித்து, அந்த அணி வீரர் பேர்ஸ்டோ சதமடிக்க 384 ரன்கள் எடுத்து இருந்தது.

இதனால் முதல் இன்னிங்சில் 132 ரன்கள் முன்னிலையில் இருக்கிறோம் என நினைத்து இரண்டாவது இன்னிங்க்ஸை மெத்தனமாகவே இந்திய அணி ஆடியதுக்கே என கூறலாம்.  புஜாராவை தவிர மற்ற அனைவரும் இதனை டெஸ்ட் கிரிக்கெட் என மறந்தே விரைவாக பெவிலியன் திரும்பி கொண்டிருந்தனர்.

இறுதி நம்பிக்கையாக புஜாரா மற்றும் பண்ட் நின்று கொண்டிருந்தனர். ஆனால் அதன் பிறகு அவர்களும் வெளியேற இந்திய அணி 245 க்கு ஆல்அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்சில் 378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்க வீர்கள் பொறுப்புடன் ஆடி நல்ல ஸ்கோரை எட்ட முயற்சித்தனர்.

அதன் பிறகு வந்த வீரர்களும் அவர்களுக்கு ஈடு கொடுக்கவே,  ஜோ ரூட் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் சிறப்பாக சதமடித்து 76.4 ஓவரில் இலக்கை எட்டி 5வது டெஸ்ட் போட்டியை வென்று விட்டனர். இதனால், இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் 2-2 என்கிற வீதத்துடன் சமனில் முடிந்துள்ளது.