IND vs NZ ODI: இந்தியா-நியூசிலாந்து! முதல் ஒருநாள் போட்டி நாளை ஆக்லாந்தில் தொடக்கம்.!

Default Image

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை ஆக்லாந்தில் தொடங்குகிறது.

இந்திய அணி, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டி-20 தொடரில் முதல் டி-20 போட்டி மழையால் ரத்து, 2ஆவது போட்டியில் இந்திய அணி வெற்றி மற்றும் 3ஆவது போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் டக்வர்த் லூயிஸ் முறையில் சமனில் முடிய இந்திய அணி டி-20 தொடரை 1-0 என்று வென்றது.

டி-20 உலகக்கோப்பை முடிந்து அடுத்து வர இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் இந்த இரு அணிகளுக்கிடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்க இருக்கிறது. முக்கிய சீனியர் வீரர்கள் இல்லாத இந்திய அணியில் ஷிகர் தவான் தலைமை வகிக்கிறார்.

இந்தியாவிற்கெதிரான 3ஆவது டி-20 போட்டியில் மருத்துவ காரணங்களுக்காக விலகிய நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ஒருநாள் தொடரில் நாளை களமிறங்குகிறார். மேலும் அந்த அணியில் முக்கிய வீரர்களான மார்ட்டின் கப்தில், ட்ரென்ட் போல்ட் மற்றும் இஷ் சொதி இடம்பெறாதது அவர்களுக்கு இழப்பாகவே கருதப்படுகிறது.

கடந்த முறை 2020 இல் இந்திய அணி, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி, இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது. தற்போது சூப்பர் ஃபார்மில் விளையாடிக்கொண்டிருக்கும் சூர்யகுமார் யாதவ், ஒருநாள் போட்டியிலும் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்வார் என்று நம்பப்படுகிறது.

ஐசிசி சமீபத்தில் வெளியிட்ட ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் நியூசிலாந்து அணி முதலிடமும், இந்தியா 3ஆவது இடமும் வகிக்கிறது. கடந்த 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் வில்லியம்சன் வெறும் 6 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார்.

இந்திய அணியிலும் ரோஹித் சர்மா, கோலி, ராகுல், ஜடேஜா, பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்டிக் பாண்டியா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்தியா களமிறங்குகிறது. இந்தியா கடைசியாக விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளில் 4இல் வெற்றியும் ஒரு தோல்வியும் பெற்றிருக்கிறது. நியூசிலாந்து அணி கடைசியாக விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளில் 2இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இரு அணி வீரர்கள் விவரம்,

இந்திய அணி: ஷிகர் தவான்(C), சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன்(W), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரிஷப் பந்த்

நியூசிலாந்து அணி: ஃபின் ஆலன், டெவன் கான்வே(W), கேன் வில்லியம்சன்(C), க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், லாக்கி பெர்குசன், டிம் சவுதி, ஆடம் மில்னே, மாட் ஹென்றி, டாம் லாதம்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
Vijay
TVK Leader Vijay speech in parandur
s.regupathy eps
tvk vijay
TVK Leader Vijay visit Parandur
muthukumaran bigg boss