முதல் இன்னிங்சில் 376 ரன்கள்...! இந்திய அணி 131 ரன்கள் முன்னிலை..!

Finally, the Indian team scored 326 runs in 115.1 overs. Rahane was unbeaten on 112 on the field till the last.

நேற்று முன்தினம் இந்திய , ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 72.3 ஓவரில் 195 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக மாயங்க் அகர்வால், சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலேயே மயங்க் அகர்வால் வெளியேற இதையடுத்து களமிறங்கிய புஜாரா 17 ரன்னில் வெளியேறினார். பின்னர் ரஹானே, சுப்மான் கில் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கை உயர்த்தினார்.

சிறப்பாக விளையாடி வந்த சுப்மான் கில் 45 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் அடுத்து இறங்கிய ஹனுமா விஹாரி 21, ரிஷாப் பண்ட் 29 ரன்களில் பெவிலியன் திரும்பினர். இதையெடுத்து, ரஹானே, ஜடேஜா சிறப்பாக விளையாடி வந்தனர். அதிரடியாக விளையாடி வந்த ரஹானே சதமும், ஜடேஜா அரைசதமும் விளாசினார்.

இதையடுத்து களமிறங்கிய மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக இந்திய அணி 115.1ஓவரில் 326 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியாவை விட 131 ரன்கள்  முன்னிலையில் இருக்கிறது. தற்போது ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கி 23 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 56 ரன்கள் எடுத்துள்ளனர்.