முதல்நாள் ஆட்ட முடிவில் 258 ரன்கள் சேர்த்த இந்தியா..!

At the end of the first day's play, the Indian team lost 4 wickets in 84 overs and scored 258 runs.

முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 84 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் எடுத்தனர்.

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரராக மயங்க் அகர்வால், சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர்.

தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 13 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். சிறப்பாக விளையாடிய சுப்மான் கில் 52 ரன்கள் குவித்தார். அடுத்து களமிறங்கிய புஜாரா 26,  ரஹானே 35 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்ப பின்னர், கூட்டணி அமைத்த  ஷ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி  அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய இருவருமே அரைசதம் விளாசினார்.

இந்நிலையில், முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 84 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் எடுத்தனர். களத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் 75* , ஜடேஜா 50* ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர். நியூசிலாந்து அணியில் கைல் ஜேமிசன் 3, டிம் சவுத்தி 1 விக்கெட்டை பறித்தனர்.