இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர், வான்கடேவில் இன்று தொடக்கம்.!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று மும்பை, வான்கடேவில் தொடங்குகிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று மும்பை, வான்கடேவில் தொடங்குகிறது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இதில் 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இரு அணிகளுக்கிடையேயான ஒருநாள் தொடர் இன்று மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

முதல் ஒருநாள் போட்டி மும்பையிலும், 2-வது ஒருநாள் போட்டி மார்ச்-19 இல் விசாகப்பட்டினத்திலும், 3-வது ஒருநாள் போட்டி மார்ச்-22 இல் சென்னையிலும் நடைபெறுகிறது. கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து இந்தியாவிற்கு தலைமை ஏற்பார் என்றும் முதல் ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக ஹர்டிக் பாண்டியா செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா வின் இடத்தில் இஷான் கிஷன் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக வழிநடத்துகிறார். இந்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்த ஒருநாள் தொடர் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய அணி: இஷான் கிஷன் (W), ஹர்திக் பாண்டியா (C), ஷுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், முகமது ஷமி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக். , ஜெய்தேவ் உனட்கட்

ஆஸ்திரேலிய அணி: ஸ்டீவன் ஸ்மித் (C), அலெக்ஸ் கேரி (W), டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஸ்சன், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், ஆஷ்டன் அகர், சான் அபோட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோனிஸ், ஜோஷ் இங்கிலிஸ், நாதன் எல்லிஸ்