வெஸ்ட் இண்டீஸ் – இந்திய அணிக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்றது.இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணி:
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மேற்க இந்திய தீவுகளின் தொடக்க ஆட்டக்காரர்களான கைல் மேயர்ஸ்ஒரு ரன் மட்டும் அடித்து ஆட்டம் இழக்க அவரைத் தொடர்ந்து நிதானமாக விளையாடிய பிராண்டன் கிங் 28 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.
அவரத்தொடர்ந்து வந்த சார்லஸ் 3 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழக்க,நிக்கோலஸ் பூரன்(41) மற்றும் ரோவ்மேன் பவல்(48) அதிரடியாக விளையாடி அணி ரன்னை வெகுவாக உயர்த்தினர்.இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை எடுத்து.
இந்திய பந்து வீச்சாளர்களில் சாஹல் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு 2 விக்கெட்களை எடுத்தார்.அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட் மற்றும் ஹர்திக் பாண்டியா ,குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர் .
இந்திய அணி :
இதனைத்தொடர்ந்து 150 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்கார்களான இஷான் கிஷன்(6) ஷுப்மான் கில்(3) அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றத்தை தந்தனர்.
சூர்யகுமார் யாதவ்(21), திலக் வர்மா(39), ஹர்திக் பாண்டியா(19) ரன்கள் எடுத்தனர்.இதில் தனது முதல் போட்டியில் களம்கண்ட திலக் வர்மா எதிர்பார்த்ததை போல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சஞ்சு சாம்சன் 12 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆக அக்சர் படேல் (13) , குல்தீப் யாதவ்(3),அர்ஷ்தீப் சிங்(12) எடுத்து ஆட்டமிழந்தனர்.இறுதியில் இந்திய அணி 9 விக்கெட்களை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்களில் மெக்காய்,ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் அகேல் ஹொசைன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
