AUSvIND: 324 ரன்கள் தேவை.. வெற்றிபெறுமா இந்திய அணி??

With the fourth Test between Australia and India in full swing, India will win the final by 324 runs tomorrow.

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நாளை நடைபெறும் இறுதி நாள் ஆட்டத்தில் 324 ரன்கள் அடித்தால் இந்திய அணி வெற்றிபெறும்.

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதன்பின் தனது முதல் இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கியது. அப்பொழுது இந்திய அணி 336 ரன்கள் அடித்தது.

பின்னர் நடைபெற்ற இரண்டாம் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாங்காமல் 294 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 55 ரன்களும், வார்னர் 48 ரன்கள் அடித்தார். பந்துவீச்சை பொறுத்தளவில் சிராஜ் தலா 5 விக்கெட்களும், ஷர்த்துல் தாக்குர் தலா 4 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினார்கள்.

அதன்படி 328 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா – சுப்மன் கில் களமிறங்கினார்கள். 1.5 ஆம் ஓவர் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் கூட இழக்காமல் 4 ரன்கள் எடுத்தது. இதில் ரோஹித் சர்மா 4 ரன்களுடனும், சுப்மன் கில் ஒரு ரன் கூட எடுக்காமல் களத்தில் இருந்தார். அப்பொழுது மழை குறுக்கிட்டதால், 4 ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் கடைசி நாள் ஆட்டம் எப்போதும் கடினமானதாகவே இருக்கும். அதுமட்டுமின்றி, ஏற்கனவே இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளதால், வெற்றிபெறப்போவது யார் என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.