#INDvsENG: இந்தியாவிற்கு 49 ரன்கள் வெற்றி இலக்கு…!

இந்திய அணிக்கு 49 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்தியா, இங்கிலாந்துக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு போட்டியாக அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் இறங்கிய இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்திய அணியின் பந்து வீச்சில் அக்சர் படேல் 6 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டை வீழ்த்தினார்கள். பின் இறங்கிய இங்கிலாந்து அணியின் சுழல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். இதனால் இந்திய அணி 33 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இங்கிலாந்து அணியில் கேப்டன் ரூட் 5 விக்கெட்டுகளையும், ஜாக் லீச் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் பின் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 30.4 ஓவரில் 81 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இந்திய அணியில் அக்சர் படேல் 5 , அஸ்வின் 4, வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்திய அணிக்கு 49 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.