தடுமாறிய இந்திய அணி !அரை சதம் அடித்து அசத்திய தாகூர் மற்றும் சுந்தர்

India vs Australia 4th Test, Day 3: Washington Sundar hits his maiden Test fifty and also Maiden Test fifty for Shardul Thakur

நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தாகூர் மற்றும் சுந்தர் அரைசதம்  அடித்துள்ளனர்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி , பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.நேற்று முன்தினம் தொடங்கிய இந்த நான்காவது போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.இதன் பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கி விளையாடி வருகிறது.மூன்றாவது நாளான இன்றும் இந்திய அணி தொடந்து விளையாடி வருகிறது.6 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்து தடுமாறினாலும் தாகூர் மற்றும் சுந்தர் இணை சிறப்பாக விளையாடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர்.சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தனர்.

தற்போது வரை இந்திய அணி 101 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 307 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் தமிழக வீரர் சுந்தர் 54 ரன்கள் ,தாகூர் 65 ரன்களுடன் உள்ளனர்.ஆஸ்திரேலிய அணியை விட 62 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி விளையாடி வருகிறது.