ஒருநாள் போட்டியில் ரிச்சர்ட்சன் விலகல், ஆண்ட்ரூ சேர்ப்பு .!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 சர்வதேச போட்டியில் கேன் ரிச்சர்ட்சனுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டை ஆஸ்திரேலியாவின் அணியில்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 சர்வதேச போட்டியில் கேன் ரிச்சர்ட்சனுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டை ஆஸ்திரேலியாவின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ளனர். இவர்கள் ஆடும் முதல் ஒருநாள் போட்டி, 27ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அடுத்தாக நடைபெறவுள்ள டி-20 தொடர், டிசம்பர் 4-ஆம் தேதி 11-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், அடுத்த வாரம் தொடங்க உள்ள இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 சர்வதேச போட்டிகளில் கேன் ரிச்சர்ட்சனுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டை ஆஸ்திரேலியாவின் அணியில் இணைந்துள்ளார்.

காரணம்:

ரிச்சர்ட்சன் தனது மனைவிக்கு புதிதாக மகன் பிறந்துள்ளதால் அவர் மனைவியுடன் இருக்க அணியில் இருந்து விலகியதாக ஆஸ்திரேலியா இன்று தெரிவித்துள்ளது.

முதல் ஒருநாள் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நவம்பர் 27 நடைபெறுகிறது. மேலும், ஆஸ்திரேலியாவும் இந்தியாவும்  டிசம்பர் 17 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளது.