இந்தியா VS இலங்கை அணிகள் இன்று மோதல் – தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?...!

India VS Sri Lanka clash today - Will India win the ODI series? ...!

இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது .

இந்தியா vs இலங்கை முதல் ஒருநாள்:

அதன்படி,கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாச ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது.முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியினர் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 262 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணியில், சாஹல், தீபக் சஹர்,குல்தீப் ஆகிய மூவரும் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா, குருனால் பாண்டியா தலா ஒரு விக்கெட்டையும் பறித்தனர்.

unknown node

அதன்பின்னர்,இந்திய அணியின் தொடக்க வீரராக பிருத்வி ஷா, தவான் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலேயே பிருத்வி ஷா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் தவான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

unknown node

பிருத்வி ஷா 26 பந்தில் 43 ரன்கள் குவித்தார். அதில் 9 பவுண்டரி அடங்கும். பின்னர் களமிறங்கிய இஷன் கிஷன் தவானுடன் கூட்டணி அமைத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்கள் இருவருமே அரை சதம் விளாசினார். அதிரடியாக விளையாடிய இஷன் கிஷன் 59 ரன்னில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய மனிஷ் பாண்டே வந்த வேகத்தில் 26 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

பின்னர் சூரியகுமார் யாதவ் களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடி வந்த ஷிகர் தவான் அதிரடி காட்ட இறுதியாக இந்திய அணி 36.4 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 263 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

கடைசிவரை தவான் 86* , சூரியகுமார் யாதவ் 31* ரன்கள் எடுத்து களத்தில் நின்றனர்.

unknown node

இந்தியா vs இலங்கை இரண்டாவது ஒருநாள் போட்டி:

இந்நிலையில்,இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று மாலை 3:00 மணிக்கு தொடங்குகிறது. மேலும்,டாஸ் மாலை 2:30 மணிக்கு நடைபெறும்.

இப்போட்டியில் தரமான இந்திய பேட்டிங்கை சமாளிக்க இலங்கை அணியினர் கடும் முயற்சி செய்ய வேண்டிய நிலையில்,இந்திய அணி மீண்டும் வெற்றி பெற்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.