டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச தேர்வு.!

டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இந்தியா-நியூசிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் 2-வது  போட்டி இன்று ராஞ்சியில் உள்ள JSCA மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றகேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணி வீரர்கள்:

ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நியூஸிலாந்து அணி வீரர்கள்:

மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், டிம் சீஃபர்ட் (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் நீஷம், இஷ் சோதி, மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி (கேப்டன்) ஆடம் மில்னே, டிரெண்ட் போல்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.