தொடர்ந்து காயமடையும் இந்திய வீரர்கள்.. 4-வது டெஸ்ட்டில் விஹாரி விலகல்..!

Vihari has been ruled out of the fourth Test due to injury. The match will be played at The Cappa, Brisbane.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் இருந்து விஹாரி விலகினார்.

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் 3 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததால் தற்போது இரு அணிகளும் சமமான புள்ளிகளுடன் உள்ளன. இதற்கு முன் நடைபெற்ற 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக விஹாரி விலகியுள்ளார். இதற்கு முன் வயிற்று வலி காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஜஸ்பிரீத் பும்ராவும் விலகியுள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அதிக வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

3-வது டெஸ்ட் போட்டியில் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜாவிற்கு காயம் ஏற்பட்டது. ஆனால் ரவீந்திர ஜடேஜா விளையாடவில்லை, பண்ட் விளையாடினார். மேலும், இந்தத் தொடரின் போது முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் காயம் அடைந்தனர்.

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 15-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இப்போட்டி தி கப்பா, பிரிஸ்பேன் என்ற மைதானத்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.