#AUSvIND: இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு..! தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு..!

The 3rd and final ODI between India and Australia takes place today. India won the toss and elected to bat.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்திய அணி வீரர்கள்:

ஷிகர் தவான், சுப்மான் கில், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷார்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், நடராஜன், பும்ரா ஆகியோர் இடம்பெற்றனர்.

ஆஸ்திரேலியா அணி வீரர்கள்:

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), மார்னஸ் , ஸ்டீவன் ஸ்மித், மேக்ஸ்வெல், மொய்சஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், ஆஷ்டன் அகர், சீன் அபோட், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம்பெற்றனர்.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் தொடரை கைப்பற்றியது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது  போட்டியில் , ஆஸ்திரேலிய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மேலும், தமிழக வீரர் நடராஜனுக்கு  இன்றைய போட்டியில் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.