78 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்த இந்திய அணி..!

India lost all their wickets at the end of 40.4 overs and scored 78 runs.

இந்திய அணி 40.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 78 ரன்கள் எடுத்துள்ளனர்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளிடையே 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் , கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலே கே.எல் ராகுல் ரன் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து களம் கண்ட புஜாரா 1 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

அடுத்தடுத்து விக்கெட் இழந்ததால் கேப்டன் கோலி முதல் 2 போட்டிகளில் சரியாக விளையாடாததால் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால், 7 ரன் எடுத்து விராட் பெவிலியன் திரும்பி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார். பின்னர், ரோஹித் , ரகானே இருவரும் நிதானமாக விளையாட அணி சரிவில் இருந்து மீண்டு வரும் என எதிர்ப்பட்ட நிலையில், ரகானே 18 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க பின்னர் களம் கண்ட ரிஷாப் பண்ட் 2, ஜடேஜா 4, இஷாந்த் சர்மா 8 , ஷமி, பும்ரா ரன் எடுக்காமலும் விக்கெட்டை அடுத்தடுத்து இழந்தனர்.

இதனால், இந்திய அணி 40.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 78 ரன்கள் எடுத்துள்ளனர். இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரேக் ஓவர்டன் தலா 3, ராபின்சன், சாம்கரண் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.