, ,
Narendra Modi With Indian Team

மோடியுடன் இந்திய அணி ..! கோச் முதல் வீரர்கள் வரை மனம் திறந்து பேசியது என்ன?

By

டெல்லி : 17 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி 20 ஓவர் உலகக்கோப்பையை வென்று அசத்தியது. இந்நிலையில், நேற்று வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து காலை விருந்து அளித்தார். அங்கு அவருடன் இந்திய வீரர்கள், பயிற்சியாளராக டிராவிட் என அனைவரும் மனம் திறந்த பேசினார்கள்.

அதில் முக்கிய வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி , ரிஷப் பண்ட், ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் மனம் திறந்து பேசியதை பற்றி பாப்போம்.

ரோஹித் சர்மா : 

“நாங்கள் அனைவரும் இதற்காக நிறைய வருடங்கள் காத்திருந்தோம், இதற்காக மிகவும் கடினமாக உழைத்தோம். பலமுறை உலகக் கோப்பையை வெல்வதற்கு மிக அருகில் வந்து தோல்வி அடைந்தோம். ஆனால், எங்களால் முன்னேற முடியவில்லை, ஆனால் இந்த முறை அனைவராலும் இதை அடைய முடிந்தது” என்று கூறினார்.

விராட் கோலி : 

“எங்கள் அனைவரையும் இங்கு அழைத்ததற்கு மிக்க நன்றி, இந்த நாள் எப்போதும் என் மனதில் நிலைத்திருக்கும். ஏனென்றால் இந்த முழு தொடரிலும் நான் விரும்பிய பங்களிப்பை என்னால் அளிக்க முடியவில்லை. மேலும், ஒரு நேரத்தில் என்னால் முடியவில்லை என்று ராகுல் பாயிடம் சொன்னேன். அவர் அணிக்கு வெற்றி தேவைப்படும் நேரத்தில் நீ ஃபார்முக்கு வருவாய் என்று உறுதியாகச் சொன்னார். இது போல பல உரையாடல்கள் எங்களுக்குள் நடந்தது.

மேலும், நாங்கள் விளையாடச் சென்றபோது, நான் விரும்பியபடி நான் பேட்டிங் செய்ய முடியுமா என்று எனக்கு நம்பிக்கை இல்லை என ரோஹித்திடம் சொன்னேன். ஆனால் போட்டியின் போது முதல் 4 பந்துக்கு 3 போர் அடித்தேன், அப்போது என்ன நாள் இது ஒரு நாள் சரிவாகவும், ஒருநாள் ஏற்றமாகவும் எனக்கு அமைகிறது என்று அவரிடம் அப்போது கூறினேன்”, என்று கூறினார்.

ரிஷப் பண்ட் :

“1 1/2 வருடத்திற்கு முன்னாடி எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது , அதனால ரொம்ப கஷ்டமா இருந்துச்சு எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு நீங்க (மோடி) அம்மாவுக்கு போன் செய்து என்னிடம் பேசுனீர்கள், அதன்பிறகு தான் நான் மனதளவில் சற்று அமைதியானேன். மேலும், குணமடையும் போது, ​​நான் கிரிக்கெட் விளையாட முடியுமா? இல்லையா?  என்று மக்கள் பேசுவதை கேட்டேன். அதனால் கடந்த 1.5 ஆண்டுகளாக நான் மீண்டும் களத்திற்கு வந்து முதலில் நான் செய்வதை விட இந்திய அணிக்காக சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைத்தேன்”, என்று கூறினார்.

ஹர்திக் பாண்டியா :

“கடந்த 6 மாதங்களாக எனது வாழ்க்கையில் மிகவும் நிறைய ஏற்ற தாழ்வுகள் ஏற்பட்டுள்ளன, இந்திய ரசிகர்களே என்னை கொச்சைப்படுத்தினார்கள். நான் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்று சொன்னால் அது எனது விளையாட்டின் மூலமாக தான் இருக்க வேண்டுமென நினைத்தேன். அதன் காரணமாக வலுவாக இருக்க வேண்டும் எனவும், நன்றாக விளையாட வேண்டுமெனவும் நினைத்தேன்”, என்று பேசி இருந்தார்.

ஜஸ்பிரீத் பும்ரா : 

“நான் இந்தியாவுக்காக பந்து வீசும் போது, ​​​​மிக முக்கியமான கட்டங்களில் நான் பந்து வீசுவேன். சூழ்நிலை கடினமாக இருக்கும் போதெல்லாம், அந்த சூழ்நிலையில் நான் பந்து வீச வேண்டும். அதனால், நான் அணிக்கு உதவ முடிந்தால் மற்றும் போட்டியில் வெற்றி பெற முடிந்தால் நான் மிகவும் நன்றாக உணர்கிறேன். எந்தவொரு கடினமான சூழ்நிலையிலிருந்தும், நான் நிறைய நம்பிக்கையைப் பெறுகிறேன், மேலும் அந்த நம்பிக்கையை முன்னோக்கி கொண்டு செல்கிறேன், குறிப்பாக இந்த போட்டியில், நான் கடினமான ஓவர்களை வீச வேண்டிய பல சூழ்நிலைகள் இருந்தன, இதனால் என்னால் அணிக்கு உதவி போட்டியை வெல்ல முடிந்தது”, என்று கூறினார்.

சூரியகுமார் யாதவ் : 

இறுதி போட்டியின், இறுதி ஓவரில் சூரியகுமார் யாதவின் அந்த சிறப்பான கேட்சால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும். அந்த கேட்ச் பிடித்த தருணத்தை குறித்து சூரியகுமார் யாதவ் பேசி இருப்பார். அவர், “அந்த நிமிடம் பந்தை பிடிக்க வேண்டும் என நாம் முயற்சி செய்யவில்லை இருந்தாலும் பந்தைப் பிடிக்கலாமா வேண்டாமா என்று யோசிக்காமல் கையை நீட்டி தடுக்க முயன்றேன் பந்து என் கையில் வந்தவுடன், அதை போர்லைனின் மறுப்பக்கம் எடுத்து செல்ல வேண்டும் என நினைத்து முயற்சி செய்தேன் ..கேட்சை பிடித்தேன். இந்த கேட்ச் பிடிக்கும் முறையை அதிக முறை பயிற்சி செய்திருக்கிறோம்” என்று கூறினார்.

ராகுல் டிராவிட் : 

உங்களைச் சந்திக்க எங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், அகமதாபாத்தில் நடந்த எங்கள் போட்டியின் போது, ​​நீங்களும் அங்கு வந்திருந்தீர்கள், ஒப்புக்கொள்கிறேன், அன்று நேரம் நன்றாக இல்லை. மேலும், இன்று உங்களைச் சந்திப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பம். ரோஹித்துக்கும், சக வீரர்களும் காட்டிய போட்டி என்பது ஒருபோதும் சொல்லாத மனப்பான்மை என்று நான் கூற விரும்புகிறேன். இந்த வீரர்கள் இளைய தலைமுறையினருக்கு உத்வேகத்தை அளித்துள்ளனர் என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்” என்று பேசி இருந்தார்.

இதனை தொடர்ந்து பிரதமர் மோடியும் இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசி இருந்தார். அவர் கூறுகையில், “நீங்கள் நம் இந்திய நாட்டை உற்சாகத்தாலும்,கொண்டாட்டத்தாலும் நிரப்பி உளீர்கள் மேலும், நம் நாட்டில் மக்களின் அனைத்து நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றியுள்ளீர்கள் என்பது எங்களுக்கு மகிழ்ச்சியான விஷயம். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என பேசி இருந்தார்.

Dinasuvadu Media @2023