இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 39 ஓவர்கள் மீதம் வைத்து அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான குறைந்தபட்ச ஸ்கோர் ஆக பதிவானது.
இதையடுத்து 118 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் மிட்சேல் மார்ஷ் (66* ரன்கள்) மற்றும் ஹெட் (51* ரன்கள்) அதிரடியால் 11 ஒவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 234 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றி இலக்கை அடைந்ததால், இந்திய அணி ஒருநாள் போட்டியில் மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது.