இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்தனர்.
இந்தியா- இங்கிலாந்து இடையே 2-வது போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, முதலில் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே ரன் எடுக்காமல் ஜோஸ் பட்லர் வெளியேறினார். பின்னர், இறங்கிய மாலன் 24 , மோர்கன் 28 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
ஆனால் தொடக்க வீரராக களமிறங்கிய ஜேசன் ராய் சிறப்பாக விளையாடி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியாக இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்தனர்.
165 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.