INDvENG: சென்னையில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு!

England tour of India: The first two Tests will be played without fans in Chennai due to the spread of corona.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி, 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர், வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள், சென்னையில் நடைபெறவுள்ளது.

இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள், பிப்ரவரி 5 முதல் 9 ஆம் தேதி வரையிலும், 2 வது டெஸ்ட் போட்டி, பிப்ரவரி 13 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகுளும் அஹமதாபாதில் நடைபெறவுள்ளது. இதன்காரணமாக வரும் 27 ஆம் தேதிக்குள் இரு அணி வீரர்களும் சென்னை வரவுள்ளார். அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 3 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின் அவர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதி வழங்கப்படும்.

இந்தநிலையில், கொரோனா பரவல் காரணமாக சென்னையில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் ரசிகர்களின்றி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

டெஸ்ட் போட்டியை தொடர்ந்து நடைபெறவுள்ள டி-20 தொடர் அனைத்தும் அஹமதாபாத்திலும், மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர், புனேவில் நடைபெறவுள்ளது, குறிப்பிடத்தக்கது.