இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார் உஸ்மான் கவாஜா.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடிவரும் 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டி இன்று அகமதாபாத், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு க்வாஜா-டிராவிஸ் ஹெட் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட்(32 ரன்கள்), லபுஸ்சான்(3 ரன்கள்) இருவரும் ஆட்டமிழக்க, அதன் பிறகு களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித்(38* ரன்கள்) எடுக்க உஸ்மான் க்வாஜா (104* ரன்கள்) இந்தியாவிற்கு எதிராக முதல் சதம் அடித்து அணியை பெருமைபடுத்தினர்.
ஆஸ்திரேலிய வீரர்களை விக்கெட் எடுக்கும் இந்தியாவின் முயற்சிக்கு இன்னும் பலன் ஏதும் கிடைக்கவில்லை, தற்பொழுது வரை 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து விளையாடி வருகிறது. உஸ்மான் கவாஜா 104* ரன்களுடனும், கேமரூன் கிரீன் 49* ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.