INDvsENG: நாளை முதல் ஒருநாள் போட்டி… தீவிர பயிற்சியில் இந்திய அணி! Biceps-ஐ காட்டி கிங் கோலி பதிலடி.!

முதல் ஒருநாள் போட்டி நாளை (6 ஆம் தேதி) பிற்பகல் 1.30 மணி அளவில் நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் நடைபெறுகிறது. 

India vs England 1st ODI

நாக்பூர் : 2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நெருங்கி வரும் நிலையில், இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.

இதில் ஏற்கனவே, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்திய பிறகு, இந்திய அணி இப்போது இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. முதல் ஒருநாள் போட்டி நாளை (6 ஆம் தேதி) பிற்பகல் 1.30 மணி அளவில் நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் நடைபெறுகிறது.

இதன் பிறகு, இரண்டாவது ஒருநாள் போட்டி பிப்ரவரி 9 ஆம் தேதி கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் நடைபெறும். மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 12 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதுவரை இந்த இரு அணிகளும் மோதிய 107 ஒருநாள் போட்டிகளில், இந்தியா 58 போட்டிகளில் வென்றுள்ளது. தற்பொழுது, இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான பயிற்சி பெறும் கடைசி தொடராகும்.

முன்னதாக, டி20 தொடரின் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி, இப்போது நடைபெறவிருக்கும் ஒருநாள் தொடரிலும் வெல்வதற்கு ஆதிக்கம் செலுத்தும். அதேசமயம், டி20 தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு ஒருநாள் தொடரை வென்று பதிலடி கொடுக்கும் நோக்கில் இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது.

அந்த வகையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியை முன்னிட்டு, இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். தற்போது நடந்து முடிந்த ரஞ்சி டிராபி போட்டிக்குப் பிறகு, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியுடன் விராட் பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.

நேற்றைய தினம், இந்திய அணி நாக்பூரில் பயிற்சி மேற்கொண்டது. அப்பொழுது, விராட் கோலி செய்த ஒரு செயலின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விராட் மைதானத்திலேயே தனது உடற்தகுதியால் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

சமீபகாலமாக மோசமாக விளையாடி வரும் கோலி, ரஞ்சி கோப்பையில் டெல்லி-காக விளையாடியபோதும் சொதப்பினார். இதனால், அவர் மீது கடும் விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பயிற்சியின்போது Biceps-ஐ காட்டி, தான் யார் என்று பாருங்கள் என மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

விராட் பல வருடங்களாக தனது உடலை இப்படித்தான் பராமரித்து வருகிறார். கிரிக்கெட் வீரர்கள் 36 வயதில் ஓய்வு பெறுகிறார்கள், ஆனால் விராட் கோலி இந்த வயதில் இளைஞர்களை விட சிறந்தவர் என்று நிரூபித்து வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்