#INDvsNZ கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத நாள்.. தோனியின் கடைசி போட்டி!

Default Image

2019 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை போட்டி, ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதினர்.

மாஞ்செஸ்டரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதில் முதலில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து, 239 ரன்கள் எடுத்தது.

இந்த போட்டி, மழை காரணமாக இரண்டு நாட்களாக நடத்தப்பட்டது. மேலும் அங்கு ஈரப்பதம் காணப்பட்டதால், நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சுக்கு சாதகமாக அமைத்துள்ளது. 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக, அவர்கள் தலா ஒரு ரன் மட்டுமே எடுத்து வெளியேறி நிலையில், இந்திய அணி 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சாரலான மாட் ஹென்றி, இவர்களின் விக்கெட்களை வீழ்த்தினார்.

அதன்பின் களமிறங்கிய ரிஷப் பந்த், நிதாரணமாக ஆடி வந்த நிலையில், தினேஷ் கார்த்திக் 6 ரங்களில் வெளியேறினார். இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்க்கு 24 ரன்களே மட்டும் எடுத்தது. அடுத்த களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, பந்த்துடன் இணைந்து சற்று நிதானமாக விளையாடினர்.

அப்பொழுது ரிஷப் பந்த் 32 ரன்களில் வெளியேறினார். அவரைதொடர்ந்து ஹர்திக் பாண்டியாவும் 32 ரன்களில் வெளியேறினார். அப்போது இந்திய அணி 92 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்த நிலையில், ரசிகர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

அதற்கு காரணம், இந்திய அணியின் வெற்றிக்கேப்டனான தோனி களத்தில் நின்றார். தோனி வருகையின்போது மைதானமே அதிர்ந்தது. மேலும், ரசிகர்கள் மத்தியில் இந்திய அணி வெற்றிபெறும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது. அவருடன் ஹர்திக் பாண்டியாவும் இணைந்தார். ஆனால், அவர்களின் கூட்டணி, நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் 32 ரன்களில் வெளியேறினார். அவரைதொடர்ந்து ஜடேஜா களமிறங்கினார். தனது திறமை வெளிக்காட்டிய ஜடேஜா, 47 ஆம் ஓவர் முடிவில் 59 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

48 ஆம் ஓவரின் முதல் பந்தில், தோனி அதிரடியாக ஒரு சிக்சர் அடித்தார். அந்த சிக்ஸரை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அந்த ஓவரின் மூன்றாம் பந்தில் தோனி இரண்டு ரன்களுக்கு முயற்சி செய்தார். அப்பொழுது மார்ட்டின் குப்தில் ஸ்டம்ப்ஸ் ஐ நோக்கி பந்தை வீசினார். தோனி அவுட்டாகிய நிலையில், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனமுடைந்தனர்.

மேலும் அந்த போட்டியில் இந்திய அணி 221 ரன்கள் எடுத்து, தனது அனைத்து விக்கெட்களை இழந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் போனது. அதுமட்டுமின்றி, அதுவே தோனி விளையாடிய கடைசி போட்டியாகும். அவரை எப்போது களத்தில் பாப்போம் என அவரின் ரசிகர்கள் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்