இந்தியா-இலங்கை மோதும் 3-வது டி-20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி 12 ஓவர்களில் 113/2 ரன்கள் குவிப்பு.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டி இன்று, ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்திருந்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 12 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் குவித்துள்ளது.
ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் 5 போர்கள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 35 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ்(41*ரன்கள்) , ஷுப்மன் கில்லுடன்(35*ரன்கள்) சேர்ந்து அதிரடியாக விளையாடி வருகிறார்.