INDvsSLODISeires: ஷனாகா சதம் வீண்! 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.!

இந்தியா-இலங்கை மோதிய முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

இந்தியா-இலங்கை மோதிய முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி, விராட் கோலியின்(113 ரன்கள்) சதம், ரோஹித்(83 ரன்கள்) மற்றும் ஷுப்மன் கில்(70 ரன்கள்) ஆகியோரின் அரைசதங்களுடன் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் எடுத்தது.

374 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 306/8 ரன்கள்  குவித்தது. அதிகபட்சமாக ஷனாகா 108* ரன்களும்,பதும் நிசாங்கா 72 ரன்களும் குவித்தனர். இந்திய அணி தரப்பில் உம்ரான் மாலிக் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களும் சிராஜ் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். இதனால் இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்று முன்னிலையில் உள்ளது.