சொந்த மண்ணில் வெற்றி பெறுமா மும்பை..? இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்..!

ஐபிஎல் 2023 தொடரில் மும்பையில் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் 2023 தொடரில் மும்பையில் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

16-வது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே  ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

இந்த சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை அணி இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் மும்பை அணி 6-வது இடத்தில் உள்ளது. கடைசியாக ஹைதராபாத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 178 ரன்கள் மட்டுமே எடுத்த ராஜஸ்தான் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மும்பை அணி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது.

மேலும், பஞ்சாப் அணி, இதுவரை நடந்த 6 போட்டிகளில் 3 போட்டிகளில் வென்று புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. கடைசியாக பெங்களூர் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில், 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இன்றைய போட்டி மும்பையில் நடைபெறவுள்ளதால் மும்பை அணிக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை vs பஞ்சாப் : போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்களின் பட்டியல்.

மும்பை இந்தியன்ஸ் :

ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன், திலக் வர்மா, டிம் டேவிட், அர்ஜுன் டெண்டுல்கர், நேஹால் வதேரா, ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டாஃப்

பஞ்சாப் கிங்ஸ்:

அதர்வா டைடே, பிரப்சிம்ரன் சிங், மேத்யூ ஷார்ட், லியாம் லிவிங்ஸ்டோன், ஹர்ப்ரீத் சிங் பாட்டியா, சாம் குர்ரான், ஜிதேஷ் சர்மா, ஷாருக் கான், ஹர்ப்ரீத் ப்ரார், நாதன் எல்லிஸ்/ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங், ராகுல் சாஹர்