IPL 2024 : தளபதி ஸ்டைலில் களமிறங்கிய 'தல' தோனி.! ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்.!

IPL 2024 : இந்த ஆண்டில் நடைபெற போகும் ஐபிஎல் தொடரில் முதல் போட்டியாக சென்னை அணியும், பெங்களூரு அணியும் மார்ச்-22ம் தேதி மோதவுள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற

Featured image

IPL 2024 : இந்த ஆண்டில் நடைபெற போகும் ஐபிஎல் தொடரில் முதல் போட்டியாக சென்னை அணியும், பெங்களூரு அணியும் மார்ச்-22ம் தேதி மோதவுள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடர் தான் தல தோனி கடைசியாக விளையாட போகும் தொடர் என்று சென்னை அணியினை ரசிகர்கள் நினைத்து கொண்டிருந்தனர். ஆனால், இறுதி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையை வென்ற பிறகு அணியின் கேப்டனான தோனி தான் அடுத்த ஐபிஎல் தொடரிலும் விளையாட போவதாக உறுதி அளித்தார்.

Read More :-புதிய சீசன்..! புதிய பொறுப்பு.. தோனி போட்ட பதிவால் எகிறும் எதிர்பார்ப்பு

அதை தொடர்ந்து ஒரு வருடமாக தல தரிசனத்தை மீண்டும் காண சென்னை ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் இருந்து வந்தனர். மேலும், சென்னை அணியின் சில வீரர்கள் ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளுக்காக பயிற்சியில் ஈடு பட்டு வந்தனர்.  இந்நிலையில் நேற்று மாலை சென்னை அணியின் கேப்டனான தோனி ஐபிஎல் போட்டியின் பயிற்சியில் ஈடு பட சென்னைக்கு வந்து இறங்கினார்.

unknown node

MSD-CSK-IPL [File Image]அவர் வருகையை சிறப்பிக்கும் விதமாக தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய ‘லியோ’ திரைப்படத்தில் வரும் இடைவேளை காட்சியான “போட்டோபிரேம் உடைக்கும் காட்சியை” மீண்டும் புதிப்பித்து சென்னை அணி, தோனி ரசிகர்களுக்காக வெளியிட்டு உள்ளனர். CSK அணியின் அதிகாரபூர்வ சமூகத்தளமானX -லும், இன்ஸ்டாக்ராமிலும் இந்த வீடியோஅதிகமாக வைரலாகி வருகிறது. தற்போது, இந்த வீடியோவுடன் சென்னை அணியின் ரசிகர்கள் தல தோனியின் வருகையை சமூக வளைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

Read More :-IPL 2024 : பயிறிச்சியில் CSK வீரர்கள் ..! ரசிகர்கள் உற்சாகம் ..!

இந்த ஐபிஎல் தொடரும் தல தோனிக்கு கடைசியான ஐபிஎல் தொடர் என்ற பேச்சு வார்த்தை இணையத்தில் பரவி வருகிறது. கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது போல இந்த வருடமும் வெற்றி பெற்று 6-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆசையில் சென்னை ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

IPL 2024 : தளபதி ஸ்டைலில் களமிறங்கிய 'தல' தோனி.! ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்.!