#IPL Breaking: பெங்களூரு பந்துவீச்சில் வீழ்ந்தது பஞ்சாப்; RCB அபார வெற்றி.!

ஐபிஎல் தொடரின் இன்றைய RCB vs PBKS ஆட்டத்தில் 24 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி.

ஐபிஎல் தொடரின் இன்றைய RCB vs PBKS ஆட்டத்தில் 24 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி.

16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் வேளையில், 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள், மொஹாலியின் ஐஎஸ் பிந்திரா ஸ்டேடியத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப், முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியில் விராட் கோலி(59 ரன்கள்) மற்றும் டுபிளெஸ்ஸி(84 ரன்கள்) ஆகியோர் அதிரடியாக ரன்கள் குவிக்க 200 ரன்களுக்கு மேல் ஸ்கோர் உயரும் என ஒரு சமயத்தில் எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் தொடக்க வீரர்களைத்தவிர அணியின் மற்ற வீரர்கள் யாரும் சோபிக்காததால், பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் மட்டுமே குவித்தது.

பஞ்சாப் அணி தரப்பில் ஹர்ப்ரீத் ப்ரார் 2 விக்கெட்களை குவித்தார். 175 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி வீரர்கள் ரன்கள் குவிக்க திணறினர். பெங்களூரு அணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்துவந்தனர். தொடக்க வீரராக இறங்கிய பிரப்சிம்ரன் சிங் அணிக்கு அணிக்காக போராடினார். இருந்தும் அவர் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பர்னெல் பந்தில் போல்டானார்.

கடைசிக்கட்டத்தில் ஜிதேஷ் சர்மா(41 ரன்கள்) அதிரடியாக விளையாடி ரசில சிக்ஸர்களை பறக்க விட்டார். முடிவில் பஞ்சாப் அணி 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது, இதனால் பெங்களூரு அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு அணி சார்பில் சிராஜ் அற்புதமாக பந்துவீசி 4 விக்கெட்களையும் மற்றும் ஹசரங்கா  2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.