#IPL Breaking: கடைசி ஓவர் த்ரில்; குஜராத் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.!

ஐபிஎல் தொடரின் இன்றைய PBKS vs GT போட்டியில் குஜராத் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

ஐபிஎல் தொடரின் இன்றைய PBKS vs GT போட்டியில் குஜராத் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள், மொஹாலியில் ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் மோதினர். டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசியது. இதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்தது.

மேத்தியூ ஷார்ட் 36 ரன்களும், ஜிதேஷ் சர்மா 25 ரன்களும், மற்றும் ஷாருக்கான் 22 ரன்களும் குவித்து பஞ்சாப் அணியை சரிவிலிருந்து மீட்டனர். குஜராத் அணி சார்பில் மோஹித் சர்மா 2 விக்கெட்களை வீழ்த்தினார். 154 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியில், சாஹா 30 ரன்களில் ஆட்டமிழக்க கில் அதிரடியாக விளையாடி அரைசதம்(67 ரன்கள்) அடித்தார்.

unknown node

சாய் சுதர்சன் 19 ரன்கள் மற்றும் கேப்டன் ஹர்டிக் பாண்டியா 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ஆட்டத்தின் கடைசி ஓவரில் கில் 67 ரன்களில் ஆட்டமிழக்க,மில்லர்(17* ரன்கள்) மற்றும் திவாட்டியா(5* ரன்கள்) சேர்ந்து இருவரும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர். முடிவில் குஜராத் அணி, கடைசி ஓவர் வரை ஆட்டத்தைக் கொண்டு சென்று, 154 ரன்கள் அடித்து வெற்றி இலக்கை எட்டியது.