ஐபிஎல் தொடரின் இன்றைய DC vs KKR போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங்.
16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் வேளையில், 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள், டெல்லியின் அருண் ஜெட்லீ ஸ்டேடியத்தில் மோதுகின்றன.
தனது கடைசி போட்டியில் மும்பை அணியுடன் தோல்வியை சந்தித்துள்ள கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. மும்பை அணியுடன் நடந்த தோல்விக்கு பிறகு வெற்றி பெறும் நோக்கில் கொல்கத்தா அணி இன்று டெல்லி அணியை எதிர்கொள்கிறது.
டெல்லி அணியைப் பொறுத்தவரை இன்னும் ஒரு போட்டியிலும் வெல்லவில்லை. டெல்லி அணியில் முக்கிய வீரர்களின் பார்ம்அவுட் தொடர்வதால் வெற்றி பெற திணறி வருகிறது, மற்றும் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று தனது வெற்றி கணக்கை தொடரும் முனைப்பில் டெல்லி அணி இன்று களமிறங்குகிறது.
டெல்லியில் மழை பெய்ததால், டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது, இதையடுத்துடாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
டெல்லி அணி:டேவிட் வார்னர்(C), பிலிப் சால்ட்(W), மிட்செல் மார்ஷ், மணீஷ் பாண்டே, அக்சர் படேல், அமன் ஹக்கிம் கான், லலித் யாதவ், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, இஷாந்த் சர்மா, முகேஷ் குமார்
கொல்கத்தா அணி:ஜேசன் ராய், லிட்டன் தாஸ்(w), வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா(c), மந்தீப் சிங், ஆண்ட்ரே ரஸல், ரின்கு சிங், சுனில் நரைன், குல்வந்த் கெஜ்ரோலியா, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி