ஐபிஎல் திருவிழா நாளை தொடக்கம்; முதல் போட்டியில் குரு-சிஷ்யன் மோதல்.!

16-வது ஐபிஎல் திருவிழா நாளை அகமதாபாத்தில், கோலாகலமாக தொடங்கவுள்ள நிலையில், 10 அணிகளும் தயாராகி வருகின்றனர்...

16-வது ஐபிஎல் திருவிழா நாளை அகமதாபாத்தில், கோலாகலமாக தொடங்கவுள்ள நிலையில், 10 அணிகளும் தயாராகி வருகின்றனர்…

இந்தியாவின் மிகப்பெரும் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் லீக், ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தொடங்கி 2 மாதங்கள் நடைபெறும். மொத்தம் 8 அணிகளுடன் ஆரம்பித்த ஐபிஎல் தொடர் தற்போது 10 அணிகள் பங்குபெறும் மிகப்பெரிய தொடராகவும், உலகளவில் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ளதாகவும் மாறியுள்ளது.

இந்திய வீரர்கள் உட்பட சர்வதேச வீரர்களும் இந்த ஐபிஎல் தொடரில் பங்குபெறுவதால், மேலும் விறுவிறுப்பு அதிகமாகிறது. 10 அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும் அனைத்து அணிகளும் சமபலத்தில் களமிறங்குகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ்(CSK):சென்னை அணியைப் பொறுத்தவரை, கேப்டன் கூல் தோனியின்  தலைமையில் சிஎஸ்கே அணி, இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. இதுவரை 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி கடந்த முறை 2022 ஐபிஎல் இல் 9-வது இடம்பெற்று, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node

மேலும் இந்தமுறை ஏலத்தில் அணிக்கு பென் ஸ்டோக்ஸ்-இன் வரவு, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜடேஜா, மொயின் அலி, மற்றும் பென் ஸ்டோக்ஸ் போன்ற ஆல்-ரவுண்டர்கள் கூட்டணி, தொடக்கத்தில் ருதுராஜ் மற்றும் டெவன் கான்வே, பந்துவீச்சில் தீபக் சஹர், பேட்டிங்கில் சிவம் டுபே, அம்பத்தி ராயுடு, தோனி என அணி முழுவீச்சில் களமிறங்க தயாராக இருக்கிறது.

சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியில் நாளை அகமதாபாத்தில் ஹர்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது.

மும்பை இந்தியன்ஸ்(MI):இதுவரை 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, ரோஹித் சர்மா தலைமையில் இந்த முறையும் கோப்பையை வெல்லவேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது. இந்த முறை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக  விலகியுள்ளது அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

unknown node

பும்ரா இல்லாத இடத்தை அணியில் புதிதாக சேர்ந்துள்ள வேக பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் நிரப்புவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ளனர். மேலும், மும்பை அணி தனது முதல் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது.

இந்த போட்டி வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்(RCB):ஐபிஎல்லில் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத ஆர்.சி.பி அணி, இந்த முறை கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற நோக்கில், டுபிளெஸ்ஸி தலைமையில் அணி கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

unknown node

அணியின் நட்சதிர வீரரான விராட் கோலி இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் அதிரடியாக விளையாடி பல சதங்களை விளாசுவார் என ரசிகர்களால்  எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் டுபிளெஸ்ஸி, கோலி, மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், ஹேசல்வுட், ஹர்சல் பட்டேல், ஹஸரங்கா ஆகியோர் அணியில் கவனம் ஈர்க்கின்றனர்.

மேலும், ஆர்சிபி அணி தனது முதல் போட்டியில் மும்பை அணியை, வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி பெங்களூர் சின்ன சாமி மைதானத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் டைட்டன்ஸ்(GT):கடந்த ஆண்டு அறிமுகமான இரண்டு புதிய அணிகளில் ஒன்றான ஹர்திக் பாண்டியா தலைமைலயான குஜராத் டைட்டன்ஸ் அணி, தனது முதல் சீசனிலேயே கோப்பையை கைப்பற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

unknown node

மேலும் அணியில் ஹர்திக் பாண்டியா ,சுப்மன் கில், ராகுல் திவட்டியா, ரஷீத் கான், கேன் வில்லியம்சன் மற்றும் அல்ஜாரி ஜோசப் போன்ற வீரர்கள் இருப்பதால் இந்தாண்டும் அதிக எதிர்பார்ப்புடன் குஜராத் அணி களமிறங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

குஜராத் அணி தனது முதல் போட்டியில் நாளை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் எதிர்கொள்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ்(RR):சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, கடந்த ஐபிஎல் தொடர் பைனல் வரை முன்னேறியது. இருந்தும் குஜராத் அணியிடம் தோல்வியுற்று ரன்னர்-அப்பாக இரண்டாமிடம் பிடித்திருந்தது.

unknown node

பேட்டிங்கில் சாம்சன், பட்லர், ஜெய்ஸ்வால், படிக்கல், ஹெட்மயர், புதுவரவான ரூட், ரியான் பராக் கும், பவுலிங்கில் போல்ட், குல்தீப் சென், சந்தீப் சர்மா, அஸ்வின், ஜாம்பா, சாஹல் என சம வலிமையுடன் இந்தாண்டு தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்குகிறது.

unknown node

பஞ்சாப் கிங்ஸ்:ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக கேப்டன்கள் மாற்றம் செய்த முதல் அணி என்ற விசித்திர வரலாற்றை படைத்த பஞ்சாப் அணியில் இந்த வருடம் ஷிகர் தவான் தலைமையேற்கிறார்.

unknown node

ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத பஞ்சாப் அணியில், இந்த முறை ஷிகர் தவான், லியாம் லிவிங்ஸ்டன், ராஜபக்ஷா, அர்ஷிதீப் சிங், ஷாருக் கான், ரபாடா, மற்றும் அதிக விலை கொடுத்து எடுக்கப்பட்ட சாம் கரன் போன்ற வீரர்கள் இருப்பதால், இந்த முறை வெற்றி வாகை சூடும் முனைப்பில் களமிறங்கும் என்று அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா நம்பிக்கையிலுள்ளார்.

பஞ்சாப் அணி தனது முதல் போட்டியில் ஏப்ரல்-1இல் கொல்கத்தா அணியுடன் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் விளையாடுகிறது.

டெல்லி கேபிட்டல்ஸ்(DC) :டெல்லி டேர்டெவில்ஸாக தோன்றி , அடுத்து டெல்லி கேபிட்டல்ஸ் என உருவெடுத்து இளம் வீரர்கள் கொண்ட ஐபிஎல் அணியாக டெல்லி அணி இருக்கிறது. இந்த இளம் படைக்கு சுறுசுறுப்பான அணி தலைவராக ரிஷப் பண்ட் இருந்து வந்தார்.

unknown node

ஆனால், துரதிஷ்ட வசமாக ரிஷப் பந்திற்கு விபத்து ஏற்படவே அவர் இன்னும் சிகிச்ச்சையில் இருக்கிறார். இதனால், இளம் படையை தலைமை ஏற்கும் பொறுப்பு மூத்த வீரரான டேவிட் வார்னருக்கு கிடைத்திருக்கிறது. இறுதி போட்டி வரை கம்பீரமாக அழைத்து செல்லும் திறன் கொண்ட ரிக்கி பாண்டிங் தான் இந்தாண்டும் பயிற்சியாளராக இருக்கிறார்.

டேவிட் வார்னர், பிரித்வி ஷா, மிட்சல் மார்ஷ், அக்சர் பட்டேல், நோர்ட்ஜெ,முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் கொண்ட பலமான அணியாக டெல்லி அணி பார்க்கப்படுகிறது. டெல்லி அணி, தனது முதல் போட்டியில் லக்னோ அணியுடன் ஏப்ரல்-1இல் விளையாடுகிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்(SRH) :புதிய கேப்டன் எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு தனது ஐபிஎல் கோப்பையை ஹைதராபாத் கைப்பற்றியது.

unknown node

இந்தாண்டும் அணியில் அதிரடி வீரர்களான எய்டன் மார்க்ரம்,புவனேஸ்வர் குமார், தங்கராசு நடராஜன், உம்ரன் மாலிக், கிளென் பிலிப்ஸ், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் இருப்பதால் அவர்களின் சிறப்பான ஆட்டத்தை அணி நிரூபிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தனது முதல் போட்டியைராஜஸ்தான் அணிஉடன் விளையாடுகிறது. இந்த போட்டி வரும் ஏப்ரல்-2இல் நடைபெறுகிறது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்(LSG):                                                                  கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு புதிய அணிகளில் ஒன்றான கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, தனது முதல் சீசனிலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

unknown node

மேலும் அணியில் கே.எல்.ராகுல், ரவி பிஷ்ணோய் ,ஜெயதேவ் உணத்கட் , மார்கஸ் ஸ்டோனிஸ் போன்ற அதிரடி வீரர்கள் மற்றும் மார்க் வுட், க்ருனால் பாண்டியா போன்ற வீரர்களும் இருப்பதால் , இந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்புடன் அணி களமிறங்குகிறது. லக்னோ அணி, தனது முதல் போட்டியில் டெல்லி அணியுடன் ஏப்ரல்-1 இல் விளையாடுகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(KKR) :கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த முறை காயம் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடமாட்டார் என தெரிகிறது. அவருக்கு பதிலாக அணியை நிதிஷ் ராணா வழிநடத்துவார். இருந்தும், அவர் தொடரின் பாதியில் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node

2 முறை கோப்பையை வென்றுள்ள கொல்கத்தா அணி இந்த முறையும் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் களம் காணுகிறது. மேலும், கொல்கத்தா அணி தனது முதல் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டி ஏப்ரல் 1-ஆம் தேதி மொஹாலியில் உள்ள பிந்த்ரா ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.