IPL KKR vs CSK: சென்னை அணி சிக்ஸர் மழை; KKR வெற்றி பெற 236 ரன்கள் இமாலய இலக்கு.!

ஐபிஎல் தொடரின் இன்றைய KKR vs CSK போட்டியில் சென்னை அணி, அதிரடியாக பேட்டிங் செய்து 235/4 ரன்கள் குவிப்பு.

ஐபிஎல் தொடரின் இன்றைய KKR vs CSK போட்டியில் சென்னை அணி, அதிரடியாக பேட்டிங் செய்து 235/4 ரன்கள் குவிப்பு.

16-வது ஐபிஎல் தொடரின் இன்று இருபோட்டிகள் நடைபெறும் நிலையில், 7.30மணிக்கு தொடங்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணிகள் கொல்கத்தாவின்ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, முதலில் சென்னை அணியை பேட் செய்ய அழைத்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு, ருதுராஜ் மற்றும் கான்வே சிறப்பான அதிரடி தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். இருவரும் அதிரடியாக ரன்கள் குவித்து முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் குவித்த நிலையில், ருதுராஜ் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கான்வே தனது தொடர்ச்சியான 4-வது அரைசதத்தை நிறைவு செய்தார்.

அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த கான்வே 56 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பிறகு ஷிவம் துபே மற்றும் ரஹானே ஜோடி சேர்ந்து கொல்கத்தா அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் பறக்க விட்டனர். அதிரடியாக பேட்டிங் செய்த ஷிவம் துபே 20 பந்துகளில் அரைசதம் எடுத்து அசத்தினார், இருந்தும் அடுத்த பந்தில் தனது விக்கெட்டை இழந்தார்.

மறுபுறம் ரஹானே(71* ரன்கள்) தனது அதிரடி அரைசதம் அடிக்க, இதையடுத்து இறங்கிய ஜடேஜா, ரஹானேவுடன் சேர்ந்து சில சிக்ஸர்களை அடித்து சென்னை அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். முடிவில் சென்னை அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணி சார்பில், கெஜ்ரோலியா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.