ஐபிஎல் தொடரின் இன்றைய LSG vs GT போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் தேர்வு.
16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் லக்னோவின் ஏகனா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதுகின்றன.
லக்னோ அணி தனது கடைசி போட்டியில் ராஜஸ்தான் அணியை வெற்றி பெற்று இன்றைய போட்டியில் பேட்டிங், பவுலிங் என வலிமையுடன் களமிறங்குகிறது. குஜராத் அணி, தனது கடைசி போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் தோல்வியடைந்த நிலையில் இன்றைய போட்டியை எதிர்கொள்கிறது.
புள்ளிப்பட்டியலில் லக்னோ அணி 8 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், குஜராத் அணி 6 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் இருக்கின்றன. பேட்டிங் மற்றும் பவுலிங் என சம வலிமையுடன் இரு அணிகளும் இன்றைய போட்டியை எதிர்கொள்வதால், ஆட்டத்தில் அதிரடியை எதிர்பார்க்கலாம்.டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
குஜராத் அணி:விருத்திமான் சாஹா(W), ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா(C), விஜய் சங்கர், அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் திவாடியா, ரஷித் கான், முகமது ஷமி, நூர் அகமது, மோகித் சர்மா
லக்னோ அணி:கேஎல் ராகுல்(C), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன்(W), ஆயுஷ் படோனி, நவீன்-உல்-ஹக், அமித் மிஸ்ரா, அவேஷ் கான், ரவி பிஷ்னோய்