ஐபிஎல் தொடரின் இன்றைய குஜராத்துக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் அணி 153/8 ரன்கள் குவித்துள்ளது.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள், மொஹாலியில் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியில், முதல் ஒவரிலேயே பிரப்சிம்ரன் சிங், டக் அவுட் ஆகி வெளியேறினார்.
கடந்த போட்டியில் நிலைத்து நின்று விளையாடிய தவான் இன்றைய போட்டியில் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய மெத்தியூ ஷார்ட் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்து வந்த நிலையில் 36 ரன்களுக்கு ரஷித் கான் பந்தில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜிதேஷ் சர்மா, ஓரளவு நிலைத்து நின்று விளையாடினார்.
இருந்தும் அவர் 25 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது, மோஹித் சர்மாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். பானுகா ராஜபக்ஷா(20 ரன்கள்) மற்றும் சாம் கரன்(22 ரன்கள்) ஆகியோர் ஆட்டமிழக்க, இதனையடுத்து கடைசியில் இறங்கி ஷாருக்கான்(22 ரன்கள்) கொஞ்சம் அதிரடியாக விளையாடி சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடிக்க, 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி, 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்தது. குஜராத் அணி சார்பில் மோஹித் சர்மா 2விக்கெட்களை வீழ்த்தினார்.