ஐபிஎல் தொடரின் இன்றைய RCB vs DC போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி, முதலில் பவுலிங் தேர்வு.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் சின்னசுவாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. பெங்களூரு அணி, ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று 7-வது இடத்திலும், டெல்லி அணி இன்னும் ஒரு போட்டியிலும் வெற்றி பெறாததால் கடைசி இடத்திலும் இருக்கின்றன.
இதுவரை இரு அணிகளும் நேருக்குநேர் மோதியதில், பெங்களூரு அணி 17 முறையும் டெல்லி அணி 10 முறையும் வென்றிருக்கின்றன. புள்ளிக்கணக்கை தொடரும் முனைப்பில், டெல்லி அணி இன்றைய போட்டியில் வெல்வதற்கு கடுமையாக போராடும் என்பதில் சந்தேகமில்லை. இதேபோல் பெங்களூரு அணியும் கடைசியாக விளையாடி தோற்ற போட்டிகளில் இறுதிவரை சென்று போராடியே தோற்றது எனலாம்.
இதனால் பெங்களூரு அணியும் இன்றைய போட்டியில் வெல்ல அதிரடியைக் காட்டும் என்பதால் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
டெல்லி அணி:டேவிட் வார்னர் (C), மிட்செல் மார்ஷ், யாஷ் துல், மணீஷ் பாண்டே, அக்சர் படேல், அமன் ஹக்கிம் கான், லலித் யாதவ், அபிஷேக் போரல் (W), குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, முஸ்தாபிசுர் ரஹ்மான்
பெங்களூரு அணி:விராட் கோலி, ஃபாஃப் டு பிளெஸ்ஸி (C), மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக்(W), வனிந்து ஹசரங்கா, ஹர்சல் படேல், வெய்ன் பார்னல், முகமது சிராஜ், விஜய்குமார் வைஷாக்