ஐபிஎல் தொடரின் இன்றைய RCB vs DC போட்டியில், முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 174/6 ரன்கள் குவிப்பு.
16-வது ஐபிஎல் தொடரின் இன்று 2 போட்டிகள் நடைபெறுகிற நிலையில், 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் சின்னசுவாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி, தொடக்கம் முதலே அதிரடி பேட்டிங் காட்டியது. டு பிளெஸ்ஸி 22 ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி 50 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களமிறங்கிய மஹிபால் லோம்ரோர்(26 ரன்கள்) மற்றும் கிளென் மேக்ஸ்வெல்(24 ரன்கள்) குவித்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். முடிவில் RCB அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது. டெல்லி அணி சார்பில் மிட்செல் மார்ஷ் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.