IPL RCBvsLSG: டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பவுலிங்.!

ஐபிஎல் தொடரின் இன்றைய RCB vs LSG போட்டியில் டாஸ் வென்று லக்னோ அணி முதலில் பவுலிங் தேர்வு.

ஐபிஎல் தொடரின் இன்றைய RCB vs LSG போட்டியில் டாஸ் வென்று லக்னோ அணி முதலில் பவுலிங் தேர்வு.

16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் விளையாடுகின்றன. லக்னோ அணி தான் விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றியும், 1 தோல்வியும் பெற்று 4 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது.

பெங்களூரு அணி 2 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி மற்றும் 1 தோல்வியுடன் 2 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக இரு அணிகளும் நேருக்குநேர் மோதியதில் 2 போட்டிகளிலும் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில்டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.

லக்னோ அணி:கேஎல் ராகுல்(C), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன்(W), ஜெய்தேவ் உனத்கட், அமித் மிஸ்ரா, அவேஷ் கான், மார்க் வூட், ரவி பிஷ்னோய்

பெங்களூரு அணி: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெஸ்ஸி (C), மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக்(W), அனுஜ் ராவத், டேவிட் வில்லி, வெய்ன் பார்னல், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்