#IPL2020: ராஜஸ்தானுக்கு 162 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த டெல்லி.!

இன்றைய 30-வது போட்டியில் டெல்லி vs ராஜஸ்தான் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி

இன்றைய 30-வது போட்டியில் டெல்லி vs ராஜஸ்தான் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது.

டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா,ஷிகர் தவான் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே டக் அவுட் ஆனார். இவரைத்தொடர்ந்து, இறங்கிய  ரஹானே 2 ரன் எடுத்து வெளியேறினார். பின்னர், களம் கண்ட ஸ்ரேயாஸ் ஐயர் ,ஷிகர் தவான் உடன் சேர்ந்து அணியின் எண்ணிக்கையை உயர்ந்தினர்.

சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவான் இருவ்ரும் அரைசதம் நிறைவு செய்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் 53, ஷிகர் தவான் 57 ரன்னில் விக்கெட்டை இழக்க பிறகு இறங்கிய வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை, இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 161 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் அணி 162 ரன்கள் இலக்குடன்  களமிறங்க உள்ளது.